15 வயது சிறுமியை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்ய தயாராக
இருந்த இளைஞரையும் அவரது மாமாவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த திருமணத்திற்கு மாமா எனப்படும் நபர் அறிவுரை கூறியதுடன் சிறுமியை மறைத்து வைக்க அடைக்கலமும் அளித்துள்ளார்.
குறித்த சிறுமி கலேவெல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தம்புள்ளை நிகவடவன
பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நிகவடவன பிரதேச முஸ்லிம்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.