193 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இந்த ஆண்டு முதல் 10 மாத காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக 193 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர் என்றும், இந்த பணம் குழந்தைகளின் கல்வி மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.