ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவ பூமி திருமந்திர அரண்மனைக்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (2022.12.04) இடம் பெற்றது.

 





















































 இன்றைய தினம் (2022.12.04) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தின் உள்ளே அகில இலங்கை சிவ பூமி அறக்கட்டளை அனுசரணையுடன் திருமந்திர அரண்மனைக்குரிய    அடிக்கல் நாட்டு வைபவம் இன்றைய சுப முகூர்த்த வேளையிலே இடம்பெற்று இருந்தது.

இந்த நிகழ்வினை தலைமை தாங்கிய சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்  அவர்களும்  கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தலைவர் திருவாளர் மேகராஜா அவர்களும் இணை‌ந்து தலைமை தாங்கி இந்த நிகழ்வினை நடாத்தி இருந்தார்கள்.  இந்த நிகழ்வானது ஒரு அத்திவாரம் இடுதல் அங்குரார்பண நிகழ்வாக இருந்தாலும் இந்த கொக்கட்டிச்சோலை திருமந்திர அரண்மனையானது கிழக்கிலங்கை வாழ் மக்கள் மட்டுமல்லாது அகில உலகம் வாழ் சைவத்தமிழர்களுக்கு ஒரு பாரியதொரு அருட் வரப்பிரசாதமாக அமைய இருப்பது என்பது திண்ணம்
  இந்த சிவ பூமி திருமந்திர அரண்மனை ஊடாக  கல்வெட்டில் பொறிக்கப்பட்டு     3000 திருமந்திர பாடல்கள் காட்சி படுத்த படுவதுடன் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை பண்ணி நடுவிலே முகலிங்கம் ஒன்றும் பிரதிஷ்டை பண்ணி அடியவர்களுடைய தரிசனத்திற்காக வைக்கப்பட இருப்பதுடன், அடியவர்கள் 3000 திருமந்திர பாடல்களையும் அவர்களது வாயால் ஓதி உணர்ந்து வாழ்வதற்கு உரிய வழிகளையும் அவர்கள் வகுத்து கொள்வதுடன் தங்களது கையாலேயே அங்கு அமைய பெற்று இருக்கின்ற 108 சிவலிங்கங்களுக்கும் அபிஷேகங்களை செய்ய கூடிய பாக்கியத்தினையும் பெற இருக்கின்றார்கள்.இந்த 3000 திருமூலர்  திருமந்திர  அரண்மனை எதிர் வரும் சிவராத்திரி (2023.02.18) அன்று கும்பாபிஷேகம் செய்வதற்கு உத்தேசிக்கக்கட்டுள்ளது 

 இது உலகத்திலேயே நடைபெறுகின்ற முதலாவது நிகழ்வாக இருக்கின்றதனால் இன்று இந்த நிகழ்வினுடைய ஆரம்ப நாளாகிய இந்த நன்னாளில் இந்த நிகழ்வினை  சிறப்பிப்பதற்காக கலாநிதி  ஆறு திருமுருகன் ஐயா அவர்களுடன் யாழ்ப்பாணமிருந்து வருகை தந்திருந்த அமெரிக்காவின் ஹவாய் தீவினுடைய ஆன்மீக சுடர் ரிஷி தொண்டனாதர் சுவாமி அவர்களும் கலந்து  சிறப்பித்திருந்தார். அத்தோடு கொக்கட்டிச்சோலை ஆலய வண்ணக்க மார்கள் ஊர்க்குடி பெருந்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் அன்பர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.