பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட 40 இற்கும் அதிகமான உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, கலந்து கொண்டோரினால் பெருமளவான உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.
இந் நிகழ்வு உள்ளூர் உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சியினை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களின் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதற்கான சிறந்த களமாக காணப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.எல்.பிரசந்தன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்ஷன், கணக்காளர் எஸ்.புவனேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.டி .செந்தில்நாதன், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட செயலக மேற்ப்பார்வை உத்தியோகத்தர் டி.நிலோசன், பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .டி .கிருஷ்ணவேணி ,ஆர் ஜசோதா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலகத்தினால் சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது