உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 2022-ம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் இதழ் கௌரவித்துள்ளது.

 



அவருக்கு ‘உக்ரைனின் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அரசியல், இலக்கியம், சமூக சேவை முதலானவற்றில் சிறந்து விளங்கும் ஒருவரை, அந்த ஆண்டில் சிறந்த நபராக அட்டைப் படத்தில் வருடத்தின் இறுதியில் டைம் இதழ் வெளியிட்டு கௌரவித்து வருகிறது.

 அந்த வகையில் 2022-ஆம் ஆண்டின் சிறந்த நபராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டைம் இதழ் தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து டைம் இதழ் தனது டுவிட்டர் பக்கத்தில், “2022-ஆம் ஆண்டின் சிறந்த நபர் ஜெலன்ஸ்கி. அவர் உக்ரைனின் உத்வேகம். ஒரு போர்க்காலத் தலைவராக ஜெலென்ஸ்கியின் வெற்றி, அவரது தைரியத்தை நம்பியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.