சைவசமய அறிவுப்போட்டிகள் எதிர்வரும் 24,25சனி ஞாயிறு்தினங்களில் நடைபெறவுள்ளது.

 


 அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் வைரவிழாவினை முன்னிட்டு நடத்தப்படும் சைவசமய அறிவுப்போட்டிகள் எதிர்வரும் 24,25சனி ஞாயிறு்தினங்களில் நடைபெறவுள்ளது. தனிநிலைப்போட்டிகள் 24 ஆம் திகதி சனிக்கிழமையும் குழுநிலைப்போட்டிகள் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறஉள்ளது

வடக்குமாகாண மட்டப்போட்டிகள் யாழ் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்திலும் கிழக்கு மாகாணப் போட்டிகள் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் மகாவித்தியாலயத்திலும் மத்திய மாகாண மட்டப் போட்டிகள் கண்டி கலைமகள் தமிழ்வித்தியாலயத்திலும் மேல்மாகாண மட்டப்போட்டிகள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லுரியிலும் இடம்பெறவுள்ளது . போட்டிக்கு விண்ணப்பித்த போட்டியாளர்கள் அன்றைய தினம் பொறுப்பாசிரியருடன் போட்டிக்கு சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது,