25 வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்.

 


அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 25 வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் விசேட டெங்கொழிப்பு வேலைத்திட்டம் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட து

டெங்கொழிப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சுமார் 250 வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்ட 25 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.

ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலும் டெங்கொழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், தெரிவித்தார்.