(கனகராசா சரவணன்)
பெண்களுக்காக
அரசியலில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25வீத ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள்
உறுதிப்படுத்த வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களில்
உள்ள பெண் உறுப்பினர்கள் மட்டக்களப்பு காந்திபூங்காலில் நேற்று
புதன்கிழமை (7) கையெழுத்துப் போராட்டமும் கவனஈர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மையம் அமைப்பின்
16நாள் செயல்வாத கருப்பொருளினைக் கொண்டு இந்த கையெழுத்துப் போராட்டம்
மற்றும் கவனயீர்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் கிழக்கு
மாகாணத்திலுள்ள 43 உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள 183 பெண் உறுப்பினர்கள்
ஒன்றிணைந்து பெண்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தவும்
என இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பெண்களுக்கான 25வீத
ஒதுக்கீடு கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை
அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால் பெண்களின் அரசியல்
உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்துமாறும்.
ஒவ்வொரு
உள்ளுராட்சி மன்றங்களுடைய சபைகளிலும் சமத்துவமான வீதம் பெண்
பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
உள்ளுராட்சி
மன்றங்களுடைய சபைகளின் நிலையில் மற்றும் விசேட குழுக்களில் 50 வீதம்
பெண்கள் பிரதிநிதிபடுத்துவதுடன் சமமான முடிவெடுக்கும் நிலை
வழங்கப்படவேண்டும் .
அனைத்து கட்சிகளிலும் முடிவெடுக்கும் மட்டத்தல்
பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகள்
ஏற்படுத்தபட வேண்டும். உள்ளுர் மற்றும் தேசிய மட்டங்களில்
முன்னெடுக்கப்படும் எல்லாவிதமான அரசியல் செயற்பாட்டில் பெண்களுக்கான
பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு அரசியல்
கட்சிகளால் மற்றும் அரசியல்வாதிகளால் விளைவிக்கப்படும் பாரபட்சம்
ஓரங்கட்டுதல் மற்றம் வன்முறைகளை அடையாள ப்படுத்துவதற்கும் அவற்றை
இல்லாதொழிப்பதற்குமான விசேட பொறிமுறை ஒனறை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என
கோரிக்கையை முன்வைத்து கையெழுத்துப் போராட்டமும் கவனஈர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதேவேளை இங்கு முன்வைக்கபட்ட
கோரிக்கைகளை ஜனாதிபதி,பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு
என்பனவற்றுக்கு மகஜர்கள் அனுப்புவதாற்கான ஏற்பாடுகளும்
முன்னெடுக்கப்பட்டபின்ன் அங்கிருந்து விலகி சென்றனர்.