கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக டிசம்பர் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அன்றைய தினம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய தினம் மற்றும் நேரம் என்பன விண்ணப்பதாரிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.