மட்டக்களப்பில் வெளிநாட்டுக்கு அனுப்பும் போலி முகவர் ஒருவர் கைது 3 பேர் தப்பியோட்டம்--




(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்த போலி முகவர் நகர் பகுதியிலுள்ள ஒரு அறைகள் வாடகைக்கு விடும் அமைப்பு ஒன்றின் அறையில் தங்கியிருந்தபோது பொதுமக்கள் அங்கு முற்றுகையிட்டு மறைந்திருந்த போலி முகவரை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன்  அவருடன் இருந்த  3 உதவி முகவர்கள் தப்பி ஓடியுள்ள சம்பவம்  நேற்று சனிக்கிழமை (3) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் வாழ்ந்துவரும்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இவர் ஜரோப்பிய நாடுகளுக்கு சட்டரீதியாக அனுப்புவதாகவும் சுவிஸ்நாட்டிற்கு அனுப்ப முதலில் 15 இலச்சம் தேவை எனவும் அங்கு சென்று பின்னர் வேலை செய்து மிகுதி பணத்தை செலுத்த முடியம் என தெரிவித்து ஆரம்ப கட்டமாக விசா ஏற்பாட்டிற்கு பணம் தேவை என இருவரிடம் 4 இலச்சத்து 25 ஆயிரம் ரூபாவை  பணத்தை வாங்கிவிட்டு தலைமறைவாகி வந்துள்ளார்.

இந்த நிலையில் மட்டு நகரிலுள்ளு அறை வாடைகளுக்கு கொடுக்கப்படும் விடுதி ஒன்றில் வெளிநாடு அனுப்புவதாக பணத்தை வாங்கி ஏமாற்றிய முகவர் தங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த விடுதியை சம்பவதினமான  நேற்று காலை முற்றுகையிட்டனர் அப்போது முகவருடன் இருந்த மட்டக்களப்பு சப் முகவர்கள் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் முகவரை மடக்கி பிடித்து பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து பொலிசார் போலி முகவரை கைது செய்து விசாரணைகளை மேற் கொண்டுவருவதாகவும் அதன் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறிப்பாக அவுஸ்ரோலியா, கனடா, மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு  அனுப்புவதாக பல போலி முகவர்களிடம் பலர் பணத்தை கொடுத்து ஏமாந்த நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர்  எனவே பொதுமக்கள் இவ்வாறான போலி முகவர்கள் தொடாபாக விழிப்பாக இருக்குமாறும் அவர்களுக்கு பணத்தை கொடுத்து ஏமாறவேண்டாம் என பொலிசார் கேட்டுள்ளனர்.