பொலிஸ்கானஸ்டபிள் ஒருவரின் மனைவியான 3 பிள்ளைகளின் தாயார் தனது கணவனின்
நண்பனான திருமணம் முடிக்காத பொலிஸ்கான்ஸ்டபிளை தன்னை திருமணம் முடிக்குமாறு
கோரி பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (5) தனது கழுத்தை பிளோற்றால்
அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
அம்பாறை
மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ்கான்ஸ்டபிள் மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிiலையம் ஒன்றில் கடமையாற்றி வந்தபோது அதே பொலிஸ்
நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ்கானஸ்டபிளுடன்
நட்பு ஏற்பட்டதையடுத்து அவருடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள அவரது
வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது 38 வயதுடைய மனைவியுடன் அவருக்கு
நட்பு ஏற்பட்டது.
நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு இருவருக்கும்
இடையே காதல் ஏற்படடுள்ள நிலையில் பொலிஸ்கான்டபிள் வாழைச்சேனை பொலிஸ்
நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு கடமையாற்றி வந்துள்ள நிலையில்; அங்கு
காதலனை தேடிச்சென்று சென்று தன்னை திருமணம் முடிக்குமாறு கோரியுள்ள
நிலையில் அதற்கு பொலிஸ்கான்டபிள் மறுப்பு தெரிவித்து வந்ததையடுத்து காதலனை
தேடி அடிக்கடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று திருமணம் முடிக்குமாறு
தொடர்சியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில்
சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) இரவு 7 மணியளவில் குறித்த தாயார்
பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ்கான்ஸ்டபிளை தொந்தரவு கொடுத்த நிலையில்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இருவரையம் கூப்பிட்டு விசாரித்துவிட்டு வெளியே
செல்லுமாறு தெரிவித்ததையடுத்து அங்கிருந்து இருவரும் வெளியே வந்தபோது
திடீரென குறித்த தாய் தான் கொண்டுவந்த பிளோற்றினால் தனது கழுத்தை அறுத்து
தற்கொலை செய்ய முயற்றித்த நிலையில் படுகாயமடைந்ததையடுத்து அவரை
வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.