(கனகராசா சரவணன்) அம்பாறை
மாவட்டத்தில் இடி மின்னல் காற்றுடன் பெய்துவரும் அடை மழையினால் இன்று
ஞாயிற்றுக்கிழமை (டிச 25) அதிகாலை 3 மணியளவில் 4 வீடுகளின் கூரைகள்
காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ இணைப்பாளர் ஏம். ஏ. முகமட் றியாஸ் தெரிவித்தார்
வங்காள
விரிகுடாவில் ஏற்பட்ட தாழ்அமுக்கம் காரணமாக நேற்று சனிக்கிழமை இரவு
தொடக்கம் பாரிய இடி மின்னல் காற்றுடன் கடும் மழை பெய்து வருகின்றது இந்த
நிலையில்; ஏற்பட்ட கடும் காற்றினால் பதியத்தலாவை பிரதேசத்திலுள்ள இரு
வீடுகளும் உகண பிரதேசத்திலுள்ள இரு வீடுகள் உட்பட 4 வீடுகளின் கூரை தூக்கி
வீசப்பட்டு சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த எவருக்கும் சேதம்
ஏற்படவில்லை
இதில் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள உறவினர்
வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்து வருவதால்
தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதுடன் குளங்களில் நீர்மட்டம்
அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் அவதாhனத்துடன் செயற்படுமாறு அவர்
தெரிவித்தார்.