56.8 சத வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர் .

 


56.8 சத வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழத் தயாராக இருப்பதாக கருத்துக்கணிப்பு (willingness to migrate)  ஒன்றில் தெரிய வந்துள்ளது.

18-29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 77.2 சத  வீதமானோர் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45.4 வீதமானவர்கள் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 52.5 சத வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.