இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் தீப்பிடித்து, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் குமார், “மௌ மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விசாரணையின் அடுப்பிலிருந்து தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.