நான்கு கால்களும் வெட்டப்பட்டு, வேட்டைப் பல்லும் கழற்றப்பட்ட நிலையில், 6 அடி நீளம் கொண்ட பெண் புலியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது .

 


நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தில், 18 ஆம் இலக்க தேயிலை மலையில், நான்கு கால்களும் வெட்டப்பட்டு, வேட்டைப் பல்லும் கழற்றப்பட்ட நிலையில், 6 அடி நீளம் கொண்ட பெண் புலியின் சடலம்,  மீட்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
18 ஆம் இலக்க தேயிலை மலைப் பகுதிக்கு, விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவரினால், உயிரிழந்;த நிலையில் புலி அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவத்தை அறிந்த பொகவந்தலாவை பொலிஸார், குறித்த இடத்திற்கு சென்று, புலியினை மீட்கப்பட்டனர்.
இதன் போது, புலியின் உடல் அழுகிய நிலையிலும், நான்கு கால்கள்
வெட்டப்பட்டு, வேட்டைப்பல் கழற்றப்பட்ட நிலையிலும் காணப்பட்டதாக, பொகவந்தலாவை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த புலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு, பொகவந்தலாவை பொலிஸார் ஊடாக தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த, நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள், உயிரிழந்த புலி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தனர். புலி உயிரிழந்த பின்னரே, அதன் கால்கள் வெட்டப்பட்டு, பற்கள் கழற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மீட்கப்பட்ட புலியின் சடலம், பிரேத பரிசோதனைக்காக, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியோடு, ரந்தனிகலை மிருக வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக, நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.