இலங்கை மக்கள் அதிர்ச்சி , மின் கட்டணம் 70 சதவீதமாக அதிகரிக்க உள்ளது .

 


ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சியம் நீதிமன்றத்தை நாடுவோம் என நுகர்வோர் உரிமையாளர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 தற்போதைய மின் கட்டண அதிகரிப்பையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 70% ஆ அதிகரிக்கும் பரிந்துரையை இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குவிற்கு சமர்ப்பிக்கவுள்ளது