மட்டக்களப்பு கல்க்குடா கிரான் தேசிய மத்திய கல்லூரி பாடசாலையில் 77ஆவது கல்லூரி தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.


 

கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக கல்லூரியின் அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பழைய மாணவர்கள். கல்லூரி அபிவிருத்தி சங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகம் என்பனவற்றால் ஒருங்கிணைகப்பட்டு பழைய மாணவர்களை மையப்படுத்தியதாக விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

ஆண்களுக்கான மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி மற்றும் கரப்பந்து சுற்றுப்போட்டி பெண்களுக்கான கரப்பந்து சுற்றுப் போட்டிகளும் நடைபெற்றன.

நிகழ்வானது கல்லூரியின் அதிபர் தவராஜா தலைமயில் கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு உதவி திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு பாடசாலை கொடி அசைக்கப்பட்டு நடைபவணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் நடைபவணியில் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர் சமூகம் வௌ;வேறு விதமான மேலாடைகளை அணிந்து கல்லூரியின் சின்னம் பொறிக்கப்பட்ட பதாதைகள் மற்றும் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர்.

அத்துடன் நடைபவனியில் பிரதேசத்தின் கலாச்சாரம் சார்ந்த விடயங்கள் விளையாட்டு அணியினர்,சாரண இயக்க அணியினர், சுற்றாடல் முன்னோடிக் கழகம் மாணவர் சிப்பாய் படையணி,முதலுதவி படையினர்,மாணவர் தலைவர்கள், போதை பொருள் ஒழிப்பதற்கான ஊர்த்தி அணியினர், நஞ்சற்ற உணவிற்காக வீட்டுத் தோட்டம் செய்வோம் என்ற விழிப்புணர்வு ஊர்தி மகாகவி பாரதியாரின் உருவப் படம் தாங்கிய ஊர்தி என கல்லூரியின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமான விடயங்கள் இவ் நடை பவனியில் அமைந்திருந்தது.அததுடன் பொது மக்களுக்கு மரக் கன்றுகளும் வழங்கப்பட்டது.

முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து ஆரம்பமான இவ் நடைபவணியானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக சென்று கும்புறுமூலை வீதி ஊடாக கல்லூரியினை சென்றடைந்தது.

இவ் நிகழ்வானது பழைய மாணவர்களிடையே பாடசலை
சமூகத்துடன் தொடர்பற்றிருந்த நட்பும்,தொடர்பும் மீண்டும் உருவாக்கக் கூடிய வாய்ப்பாக அமைந்துள்ளதுடன் பாடசாலை சமூகத்திலும் பிரதேச மக்களிடையேயும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தப்படுத்தக் கூடிய நிகழ்வாக அமைந்திருந்தது.