கிறிஸ்மஸ் பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரையில் அதிகரிக்கும் .


 

நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடுகள் இல்லை. முட்டை விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பால் முட்டையை நுகர்வோர் கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். 

கால்நடை வைத்திய அதிகாரிகளின் 32ஆவது வருட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சந்தைகளில் முட்டையின் விலை 50 - 60 ‌‌ரூபாயாகக் காணப்படுகிறபோதிலும் முட்டைக்கான கேள்வி கடுமையாகக் குறைவடைந்துள்ளது. இதனால் முட்டை உற்பத்தியும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால், முட்டையின் விலை கடுமையாக  அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.