உறவினர்களை சந்திப்பதற்கு கிறிஸ்தவ மத கைதிகளுக்கு மாத்திரம் இன்று அனுமதி வழங்கப்படவுள்ளது.
நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.
கைதிகளின் உறவினர்கள் கொண்டுவரும் உணவு ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமானதாக இருக்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் திருப்பலி ஒப்புகொடுக்கப்படவுள்ளதுடன் கரோல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.