கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்ற சாந்தபுரம் பகுதியில் சுமார் 55க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்டும் இடை விலகிய நிலையிலும் காணப்படுவதாக கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்படி பிரதேசத்தில் பல்வேறுபட்ட விழிப்புணர்வுச்
செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வருகின்ற போதும், பெற்றோர் மத்தியிலும்
சமூகத்திலும் விழிப்புணர்வு இன்மை காரணமாக, இவ்வாறு 55க்கும் மேற்பட்ட
மாணவர்கள் பாடசாலை கல்வியை விட்டு இடைவிலகிய அல்லது ஒழுங்கற்ற வரவுகளில்
காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.