தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை நடத்திய கலை விழாவும் பரிசளிப்பு விழாவும் தேற்றத்தீவு கொம்பு சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.

 


மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை நடத்திய கலை விழாவும் பரிசளிப்பு விழாவும் தேற்றத்தீவு கொம்பு சந்திப்பிள்ளையார் ஆலய முன்ற லில் பாலர் பாடசாலையின் தலைவர் தவிமலானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.அறிவழகன் மற்றும் பட்டிருப்பு கல்விவலய உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் த.இதயகுமாரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் கலைவிழாவில் பாலர் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், கொன்றைவேந்தன், ஒயிலாட்டம், ஆத்திசூடி, சிங்களப் பாடலுக்கான அபிநயம். கிராமிய நடனம், தமிழ் மொழி பேச்சு,காவடி நடனம்,கரகம், ஒளவையாரின் உலகநீதிபேச்சு,கரகம் கும்மி,திருக்குறள் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இதன் போது மேடை ஏற்றப்பட்டதுடன் மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதன்போது பாலர் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு பெற்றோரினால் பரிசீல்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.