தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .


 

அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிராக நிறைவேற்று தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் மௌன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நியாயமற்ற வரி விதிப்பால் தற்போது ஏராளமான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர்கள் அங்கு தெரிவித்தனர்.

2500 மருத்துவர்கள், 3000 பொறியாளர்கள் உட்பட ஏராளமான தொழில் வல்லுநர்கள் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.