சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் மண்முனை வடக்கு எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளின் சர்வதேச
தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் மொன்றியல் உதவும் கரங்கள் கனடா அமைப்பின்
அனுசரணையில் எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில்
வருடாந்த கௌரவிப்பு நிகழ்வும் 2023 ஆம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவும் இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் அன்புமாறன் தலைமையில் மட்டக்களப்பு வை எம் .சி. எ மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்த கௌரவிப்பு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவு நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஷியாவுல்ஹக் , மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர் ராஜ்மோகன் , வை.எம.;சி.எ நிறுவன பதில் பொது செயலாளர் பற்றிக் , புனித ஜோசெப் விசேட கல்வி நிலைய அதிபர் பரிஷ்கரன் ,அரச சார்பற்ற பிரதிநிதிகள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது மாற்றுத்திரனாளின் கலை கலாசார நிகழ்வுகளும் நினைவு பரிசில்களும் ,கௌரவிப்பும் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவும் நடைபெற்றது