சபரிமாலை யாத்திரை செல்லும் யாத்திரிகள் முன்னெடுத்த விரதத்தின் இறுதி நிகழ்வான மகரஜோதி பெருவிழாவின் மண்டல
பூர்த்தி விழா மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சபரிமலைக்கு செல்வோர் கடந்த 21தினங்களாக விரதமிருந்து வழிபாடுகளை முன்னெடுத்துவந்தனர்.
இந்த
நிலையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் தினமும் ஐயப்ப
பக்தர்களினால் பஜனைகள் மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.
ஆலயத்தின் ஐயப்ப சுவாமி விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் விசேட பூஜைகளும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து ஐயப்ப சுவாமியை சுமந்து உள்வீதியுலா நடைபெற்றதுடன் விசேட பூஜைகளும் நடைபெற்றன.
இந்த வழிபாடுகளில் பெருமளவான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர்.