கொமசல் வங்கியின் மட்டக்களப்பு கிளை உத்தியோகத்தர்கள் ஏற்பாட்டில் கிழக்கு பிராந்திய முகாமையாளர் அருளம்பழம் ஜெயபாலன் தலைமையில் மட்டக்களப்பு வில்லியம் ஹோல்ட் மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு பிராந்தியத்தில் முதல் முறையாக மட்டக்களப்பில் கொமசல் வங்கியின் மட்டக்களப்பு கிளையினால் முன்னெடுக்கப்பட்ட கிழக்கின் கிறிஸ்மஸ் நத்தர் கீதம் நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக அருட்தந்தை மகிமை தாஸ் அடிகளார் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர். கிழக்கு பிராந்திய முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற கிழக்கும் கிறிஸ்மஸ் கீதம் இசை நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண வங்கிகளின் முகாமையாளர்கள், வங்கிகளின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர் என பலர் கலந்து கொண்டனர்