இந்த வருடத்தில் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருவோரில் முதலிடம் பிடித்த நாடாக இந்தியா விளங்குவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 108,510 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
இதேவேளை இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வருடம் மார்ச் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 106,500 ஆகும்.