பனிச்சையடி ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணையில் விவசாய உற்பத்தி பயிர்கள் அறுவடை நிகழ்வு நடைபெற்றது.

 



தேசிய உற்பத்தினையும் நாட்டின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்யும் வகையில் விவசாய திணைக்களம் முன்னெடுத்து வரும் விவசாய உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பனிச்சையடி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஒருங்கிணைந்த விவசாயப்பனையில் பயிரிடப்பட்ட விவசாய உற்பத்திகளான கத்தரி தக்காளி மிளகாய் போன்ற மரக்கறி பயிர்களை அறுவடை செய்யும் நிகழ்வு மட்டக்களப்பு பனிச்சையடி எச்.ஆர் ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணையில் நடைபெற்றதுடன் வீட்டுத்தோட்ட பயிர்செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் பனிச்சையடி கிராம சேவையாளர் பிரிவில் வீட்டுத்தோட்ட பயிச்செகையினருக்கான பயிரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன

மட்டக்களப்பு பனிச்சையடி எச்.ஆர் ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணை உரிமையாளர் நாகராஜா தலைமையில் நடைபெற்ற அறுவடை நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் நாவேஸ்வரன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் . பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம் சமுர்த்தி வாங்கி முகாமையாளர் விவசாய போதனாசிரியர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் பனிச்சையடி கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களை கலந்துகொண்டனர்