(கனகராசா சரவணன்)
தமிழ்
தேசிய கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு
மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில்
அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால் நேற்று
ஞாயிற்றுக்கிழமை (4) இரவு கிழித்து செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு
செய்துள்ளதாக மட்டு தலைமைக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த
நாடளாளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு காரியாலயம் கடந்த 2 வருடங்களாக
அமைக்கப்பட்டு குறித்த தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினரை மக்கள்
சந்தித்துவருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு
காரியாலயம் பூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு நாடாளுமன்ற உறுப்பினரின்
புகைப்படம் தாங்கிய காரியாலய சந்திப்பு திகதியிடப்பட்ட பெயர்பலகையில்
ஒட்டப்பட்டிருந்த பெனரை இனம் தெரியாத விசமிகால் கிழித்து எடுத்துச்
சென்றுள்ளதாக காரியாலயத்தில் கடமையாற்றும் அவரது உத்தியோத்தர் பொலிஸ்
நிலையத்தில் நேற்று இரவு 10 மணிக்கு முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.