மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்.
















மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஈஸ்ட் லகூன் விடுதில் நேற்று  (24) திகதி இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின் தங்கிய கிராம புறங்களில் காணப்படும் வீதிகளை புணர்நிர்மானம் செய்தல் மற்றும் புதிய வீதிகளை அமைப்பது தொடர்பாக இதன்போது விசேட விதமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு தேவையாக உள்ள வீதிகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இதன் போது இராஜாங்க அமைச்சரினால் அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளதுடன், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன திட்டம் தொடர்பான வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பாக அமைச்சின் செயலாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் முயற்சிகளை அதிகரிப்பதற்கும் உற்பத்தி பொருட்கள் மற்றும் உற்பத்திதிறனை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலும் இதன் போது இடம் பெற்றது.
19 கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டு தற்போது 11 பாலங்கள் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு சில வீதிகள் அமைக்கப்படாமையினால் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது இருப்பதை இங்கு இராஜாங்க அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், எதிர் வரும் ஆண்டில் RDA மூலம் மேற்கொள்ள பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபில்யூ .ஆர்.பேமசிறி, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எந்திரி.கே.சிவகுமார், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் பி.பாரதன், முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், முன்னால் மாநகர சபை முதல்வர் திருமதி. சிவகீத்தா பிரபாகான் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.