இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பத்மவாசன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் .


 

இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பத்மவாசன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்து, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் பயிற்சி பட்டறையை நடத்தினார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஆலயத்தில் குருகுல மாணவர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு  விசேட கருத்தரங்கை நடத்தினார். ‘ஒவியத்தினுடாக இறைவனை காணலாம்’, ‘நாவலர் பெருமான் - வாழ்வும் வாக்கும்’  போன்ற தலைப்பில் வரைதலுடான கருத்துரை வழங்கப்பட்டது.