மட்டக்களப்பு மாவட்ட உளநல உதவி நிலையம் மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சிறுவர்களை மையப்படுத்தி சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் முழுமையான சுகவாழ்வுக்கான உளநல சூழலை நோக்கிய செயல் திட்டத்தின் சிறார்களின் உளநல சுகவாழ்வு சூழலை உருவாக்கும் நோக்குடன் சிறுவர் கழகங்களுக்கிடையிலான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
அந்தவகையில் மாவட்ட உளநல உதவி நிலையம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சிறுவர் கழகங்களை முன்னிலைப்படுத்திய செயல்பாடுகளின் ஒரு அங்கமாக மார்கழி மாதத்தின் சிறப்பு நிகழ்வாக உளநல உதவி நிலைய மாமாங்கம் கிராம அழுத்த குழுவின் ஒத்துழைப்புடன் மாமாங்கம் லிற்றில் பேட்ஸ் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவு சிறுவர்கள் ஒன்றிணைந்த ஒளிவிழா நிகழ்வு மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது
மாமாங்கம் உளநல உதவி நிலைய அழுத்த குழுவின் தலைவர் புஸ்பநாதன் தலைமையில் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மாமாங்கம் சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை பிறைனர் செல்லர் அடிகளார், பிரதம அதிதியாக மாவட்ட உளநல உதவி நிலைய நிறைவேற்று பணிப்பாளர் அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளார் , சிறப்பு விருந்தினர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .ராஜன் ,,உளநல உதவி நிலையம் திட்ட இணைப்பாளர் ஜெகன் ராஜரெட்ணம் ,திட்ட உத்தியோகத்தர் எஸ் , சிவராஜா மற்றும் உளநல உதவி நிலைய மாமாங்கம் கிராம அழுத்த குழு உறுப்பினர்கள் ,சிறுவர் கழக சிறார்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .நிகழ்வில் லிற்றில் பேட்ஸ் சிறுவர் கழக சிறுவர்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன