2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு வெற்றிகரமான ஆண்டாகவுள்ளதுடன் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாம் இடம்பெற்றுள்ளதுடன் சாதாரண தரப்பரீட்சையில் இந்த ஆண்டு முதல் இடத்தினைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
இதேபோன்று உயர்தரப்பரீட்சையில் கனிசமான மாணவர்கள் பல்கலைக்கழக தகுதிபெற்றுள்ளதுடன் உயிரியல் விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் மிக்கேல் கல்லூரி மாணவன் துவாரகேஸ் அவர்கள் முதல் இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.