நிட்டம்புவை வத்துப்பிட்டிவல சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தாயான 34 வயதான இந்த பெண், நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் அவர் பயணித்த பேருந்தை நிறுத்தி கடத்திச் சென்றுள்ளனர்.
பெண்ணை கடத்திச் செல்ல பயன்படுத்திய காரின் இலக்கத்தகடு போலியானது என பொலிஸார் கூறியுள்ளனர்.
வல்கம்முல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் தொலைபேசியும் அணைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.