வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா!!









மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு  231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில் பாவற்கொடிச்சேனை சிப்பிமடு பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி
லெப்டனன் கேணல்
ஜே.ஏ.பீ.குணரெட்ணவினால்  விவசாய அறுவடைகள் வவுணதீவு பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ.பேரின்பராசா ஆகியோரிடமும் கையளிக்கப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் சிப்பிமடு பகுதியில்  தரிசி நிலமாக காணப்பட்ட  20 ஏக்கர் நிலத்தினை  இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தரிசு நிலத்தில் 16 ஏக்கரில் உன்னிச்சை இராணுவ  படைப் பிரிவினால் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்
ஒருங்கிணைந்த சேதன விவசாயப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.  

இங்கு கௌப்பி, பயறு, கச்சான் போன்ற தானியங்களுடன் மரவள்ளி, பயற்றை, புடலங்காய், பாகல், சுரக்காய், வயல் போன்ற மரக்கறி வகைகள் பயிரிடப்பட்டுள்ள நிலையில் இவற்றின் அறுவடைகளை மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.