மட்டக்களப்பில் பாடசாலை நாட்களில் மாற்று வீதி திட்டம்!!


 

 

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் மெதடிஸ்த் மத்திய கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளும் ஒரே பிரதான வீதியில் அமைந்துள்ளன.
அதனால் பாடசாலை நாட்களில் மாணவர்களின் நெரிசலினால் மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகின்றது.

மெதடிஸ்த் மத்திய கல்லூரியின் செப்பல் வீதியில் உள்ள நுழைவாயில் மாணவர்கள் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வேளைகளில் முற்பகல் 6.30 மணியில் இருந்து 8.00மணி வரையும் பிற்பகல் 12.30 இலிருந்து பிற்பகல் 2.00 மணி வரையான நேரத்தில் இந்நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் ஆமன் கோணர் வீதியில் சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் மாத்திரம் வின்சென்ட் உயர்தர பாடசாலைக்கு‌ம், மத்திய கல்லூரிக்கும் இடையில் செல்லும் அந்த இடைவீதியின் ஊடாக வைத்தியசாலை வீதியை சென்றடையலாம்.

செப்பல் வீதியில், பசார் வீதி மற்றும் பிரதான வீதியின் ஊடாக வருகின்ற அனைத்து வாகனங்களும் நீதிமன்ற சுற்றுவட்டத்தின் ஊடாக, நீதிமன்றத்துக்கு முன் வீதியில் இருந்து, நேராக சென்று, மாநகர சபைக்கு முன்பாக உள்ள பிரையன் டிரைவ் இன் ஊடாக செல்ல முடியும்.

மேலதிக தெளிவிற்கு பின்வரும் படத்தை அவதானிக்கலாம்.