ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை விழா காரைதீவில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில், நடைபெற்றது.

 


 

 வி.ரி சகாதேவராஜா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200ஆவது அகவை நிறைவை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜையும் விழாவும்  நேற்று (18) காரைதீவில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.

திருமுன்னிலை அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் (ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயம்)  கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டார்.  உரையாற்றி சிறப்பித்தார்.