9,417 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்த யோசனைக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி உயர்வு பெறும் காவல்துறை அதிகாரிகளில் 8, 312 ஆண் மற்றும் 1,005 பெண் காவலர்கள், கான்ஸ்டபிள் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான தரத்தில் உள்ளவர்கள் புதிய உத்தரவின் கீழ் அடுத்த நிலை பதவிக்கு உயர்த்தப்படுவார்கள்.
பல ஆண்டுகளாக முன்மொழிவு செய்யப்பட்ட நிலையில்,தற்போது பதவி உயர்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.