நிந்தவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் அக்கரைப்பற்றுக்கு ஹரோயின் கடத்திச் சென்ற நிந்தவூர் பிரபல போதை பொருள் வியாபாரி கைது .




கனகராசா சரவணன்  

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு மோட்டார் சைக்கிளில் போதைபொருள் கடத்திச் சென்ற வியாபாரி ஒருவரை ஒலுவில் பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (01) இரவு மடக்கிபிடித்ததுடன் அவரிடமிருந்து ஒரு கிராம் 250 மில்லிக்கிராம்  ஹரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்..

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அதிதியட்சகரின் ஆலோசனைக்கமைய அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எம்.பண்டார விஜயதுங்க தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  வசந்த, சப் இன்பெக்டர் பகீரதன். உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் சம்பவதினமான இன்று இரவு 7 மணியளவில் ஓலுவில் பகுதி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்  நிந்தவூரில் இருந்து மோட்டர்சைக்கிள் ஒன்றில் போதை பொருள் கடத்தி வந்தவரை வழிமறித்தபோது பொலிசாரைக்கண்டு மோட்டர்சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு அந்தபகுதி வயலில் பகுதியில் தப்பிஓடிய கடத்தல் காரனை பொலிசார் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் துரத்தி பிடித்து கைது செய்ததுடன் அவனிடமிருந்து ஒரு கிராம் 250 மில்லிக்கிராம்  ஹரோயின் போதைப் பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய நிந்தவூரைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு போதை பொருளை கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்டுவருபவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.