தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள வேண்டுமாக இருந்தால்,சீனா பச்சைக் கொடி காட்டினாலேயே முடியுமென வெளியான தகவல்கள்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதனை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி டிசம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புக்கான உறுதிமொழியை சீனா
வழங்கினால் மட்டுமே, ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)
நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.