கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து,
அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்குச் சேதம்
விளைவித்த, சூரியவௌ பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதுடைய நபரை கொழும்பு தெற்கு
குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட
நபர் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலதிக
விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு
பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.