சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் ?

 


சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதுவரையிலான ஊழியர் மட்ட  இணக்கப்பாடு சிறந்த நிலையில் உள்ளதாகவும், மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நடவடிக்கையினால் தற்போது பொருளாதாரம்  நிலையான மட்டத்தில் உள்ளதாகவும் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார். 

சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.