(கனகராசா சரவணன்))
பொலன்னறுவை
ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஹிங்குறாகொட பிரதேசத்தில்; வீடு ஒன்றை
முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் மக்கிரோ ரக பிஸ்டல் உள்ளுர்
தயாரிப்பு துப்பாகி மற்றும் வாளுடன் ஓருவரை நேற்று புதன்கிழமை (14); கைது
ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வு
பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையுடன்
இராணுவபுலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று குறித்த பிரதேசத்திலுள்ளு
வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனையிட்டபோது அங்கிருந்து மைக்கிரோ ரக
கைதுப்பாக்கி ஒன்று, உள்ளூர் தயாரிப்பு துப்பாகி இரண்டு. வாள் மற்றும்
துப்பாக்கி ரவைகள் என்பற்றை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்.
இதில்
கைது செய்யப்பட்டவரை கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன்
ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குறாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.