மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு பலாக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

 


மட்டக்களப்பு விமானப்படையினரால் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு பலாக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

வீடுகள் தோறும் பழமரச் செய்கையை
ஊக்கப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு விமானப்படையினரால் மாவட்டத்திலுள்ள மேலும் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு பலாமரக் கன்றுகள் வழங்கப்படவுள்ளதாகவும் இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது சுமார் 200 பாலாக் கன்றுகள் வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.