(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில்
டெங்கு நிளம்பை தேடி பொது சுகாதார அதிகாரிகள் அரச காரியாலயங்கள் மற்றும்
பொலிஸ் தலைமையகத்தினை இன்று திங்கட்கிழமை(5) முற்றுகையிட்டு தீவிர தேடல்
நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் மழைபெய்துவரும்
நிலையில் டெங்கு நுளம்பு தாக்கத்தினால் பலர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர். இதனையடுத்து மட்டு மாநகரசபை பொதுச்சுகாதார அதிகாரி
மிதுனன் தலைமையிலான சுகாதார உத்தியோகத்தர்கள் கோண்ட குழுpவினர் விசேட
சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று முன்னெடுத்தனர்
இதன் போது அரச
காரியாலயங்களான் வனபரிபாலன திணைக்களம், மட்டு பொலிஸ் அத்தியட்சகர்
காரியாலயம், மற்றும் மட்டு தலைமை பொலிஸ் நிலையம் உள்ளிட்ட அரச
காரியாலயங்களை முற்றுகையிடும் சோதனை நடவடிக்கை முன்னெடுத்ததுடன் நிளம்பு
உருவாகக்கூடி நிலையில் இருக்கும் அரச காரியாலயங்களுக்கு சிப்பு நோட்டிஸ்
வழங்கினர்.