புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

 


வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் தரப்பினர்  அரசியல் கட்சி பேதங்களை விடுத்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்ளைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.