இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்து ஏன் ?

 


அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வந்த இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராஜன் முனசிங்க என்ற  33 வயதான  இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை,  கவல்துறை உத்தியோகத்தர் டேனியல் சான்செஸ் என்பவரால் ராஜன் முனசிங்க சுடப்பட்டதாகவும், இதனையடுத்து குறித்த  காவல்துறை  உத்தியோகத்தர்  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒஸ்டின்  காவல்துறையினரால் தெரிவித்துள்ளனர்.