எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி சந்தித்து பேசி உள்ளார்

 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.