மட்டக்களப்பு - வவுணதீவில் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்!!

 


















மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 பிரதேச செயலகங்களில் போதிய வருமானமற்ற மக்களுக்கு உலக உணவுத் திட்டம் மற்றும் வேல்ட் விஷன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து உலர் உணவுப் பொருட்களை இன்று (23) திகதி வழங்கி வைத்துள்ளது.
அதன் ஆரம்ப நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள வவுனதீவு பல் நோக்குக் கூட்டுறவு சங்க வளாகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், சமுர்த்திப் பயனாளிகள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பங்கள், குறைந்த பொருளாதார வசதியுடைய குடும்பங்கள் என்ற வகைகளில் கிராம உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட நபர்களிடம் கையளிக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 5704 பயனாளிகளுக்கு வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள், தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 கிலோ கிராம் அரிசி, 20 கிலோ கிராம் பருப்பு மற்றும் 5 லீற்றர் சமையல் எண்ணெய் ஆகியன பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ் நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வவுனதீவிலும் புது மண்டபத்தடியிலும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், உலக உணவு திட்டம் நிகழ்ச்சி திட்ட உதவியாளர் திருமதி.ரஜனி கேதிஸ்வரன், மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேஸ், பல் நோக்குக் கூட்டுறவு சங்க உத்தியோகத்தர் உருத்திர மூர்த்தி, உலக உணவு திட்ட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.