மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகி வருகிறது. இந்நிலையில், பெரும் மின்சார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளவுள்ளது என பல தரப்பினரும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
கடல் சீற்றம் காரணமாக கப்பல்கள் வருவதில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னதாக 38 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைய வேண்டும் எனவும் அடுத்த வருடம் அதிக நேர மின்வெட்டுக்கு செல்லாமல் இருக்க அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.