புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவல் ஊழியர்களின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1200 பணியாளர்கள் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்ட போது, சுமார் ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஊழியர்களின் கடின முயற்ச்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது பணியாளர் ஒருவருக்கு மின்சாரம் தாக்கியதோடு, இந்த சம்பவத்தை பார்த்த யுவதிகள் இருவர் மயக்கமடைந்துள்ளனர். இவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் யுவதிகள் இருவரும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில் மின்சாரம் தாக்கிய இளைஞர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அனர்த்தம் ஏற்பட்டதும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதேவேளை கிளிநொச்சியில் இருந்து தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டு தீ முற்றுமுழுதாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் சென்று நிலமைகளை பார்வையிட்டதோடு சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் ஊடகங்களுக்கு தீபரவல் நிலமைகளை பார்வையிட அறிக்கையிட ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.